முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரால், கழகத்தின் மூத்த உறுப்பினரும் சர்வதேச விவகாரங்களில் கழகத்தின் செயற்பாட்டாளருமான தோழர் ஜெகநாதன் அவர்களூடாக முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, கனடா வாழ் எழுவைதீவு உறவுகளால் வழங்கப்பட்ட ரூ 100,000/- நிதியில் இருந்து எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற தேவையுடைய 70 குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.