கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர்.இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு 344 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.