எமது வேண்டுகோளை ஏற்று, பிரான்ஸ் கிளை அமைப்பாளர் தோழர் இரங்கா அவர்கள் பிரான்ஸ் கிளை சார்பாக ரூ 100,200.00 அனுப்பியிருந்தார்.நிதி வழங்கியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப் பணம் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் பொதுமக்களுக்கும், கழகத்தின் மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த தோழர்களின் குடும்பங்களும் பயனாளிகளில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் கொன்சால் மற்றும் தோழர் ஜேம்ஸ் ஆகியோர் மூலம் 22.04.2020 அன்று 15 பொதுமக்களுக்கும், 65 கழக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.