நாட்டில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, மன்னார், நுவரெலியா, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை எவரும் பதிவாகவில்லை.

கொழும்பு மாவட்டத்திலேயே இதுவரை அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 155 பேரும், களுத்துறையில் 63 பேரும் புத்தளத்தில் 39 பேரும் யாழ்ப்பாணத்தில் 16 பேரும் குருநாகலவில்15 பேரும் கண்டியில் 11 பேரும் அநுராதபுரத்தில் 10 பேரும் இரத்தினபுரியில் 7 பேரும் கோலையில் 7 பேரும் மொனராகலையில் 4 பேரும் ஹம்பாந்தோட்டையில் 3 பேரும் பதிவாகியுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் ஒருவர், இருவர் என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.