கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ கார் லிமிடற் நிறுவனம் 90 லட்சம் பெறுமதியான பஸ் வண்டியொன்றை அன்பளிப்பு செய்தது.பஸ் வண்டி நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேராவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.