தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று (28) மாலை 4 மணிக்குள் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறுதேர்தல்கள் ஆணைக்குழு சகல அத்தாச்சிப்படுத்தும் அதிகாரிகளையும் கேட்டுள்ளது.

அத்தாச்சிப்படுத்தும் அதிகாரிகளிடம் கிடைக்கும் சகல விண்ணப்பங்களையும் மேற்குறித்த காலத்தில் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆணைக்குழு கேட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதியே தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.