நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.அ‌றி‌க்கை ஒ‌ன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாதாந்திர கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், விவசாய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட 2020 மே மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் தபால் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து பொதுமக்களுக்கு நீர் க‌ட்டண‌ம் , மின்சார கட்டணம் செலுத்துதல், உள்ளூர் மின்னணு நாணய பரிமாற்றங்கள் மற்றும் கடிதங்கள் மற்றும் தபால்களை உள்ளூர் தபால் நிலையங்களில் ஒப்படைக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.