கொரோனா தொற்றாளர்களாக நேற்று (29) இனங்காணப்பட்ட 30 பேரில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். கடற்படை வீரர்களில் இருவர் விடுமுறையில் சென்றவர்கள் என்பதுடன் 20 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய 7 பேரும் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.