கழகத்தின் சுவிஸ் கிளை உறுப்பினர் தோழர் விஜயநாதன் இரட்ணகுமார் (குமார்) அவர்களின் தந்தை அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவாக கிடைத்த ரூ 99,160/- நிதி உதவி மூலம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட எழுபத்தைந்து (75) குடும்பங்களுக்கு covid-19 நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பகுதியில் ஐம்பது (50) குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பகுதியில் இருபத்தைந்து (25) குடும்பங்களுக்கும் இவ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கழகத்தின் பொருளாளர் தோழர். க. சிவநேசன் (பவன்), கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் தோழர் க. தவராசா, மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் தோழர். திருமதி. சரஸ்வதி, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் தோழர். திருமதி. கேதினி, தோழர். கிருபாஜினி ஆகியோர் நிவாரணங்கள் கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டிருந்தனர்.