முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் இன்று காலை சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது உயிரிழந்துள்ளார்

குறித்த முதியவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது