தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (02) விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று முற்பகல் 11.15 க்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தல் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

இதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை (03) இடம்பெறவுள்ளது.

பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான முதற்கட்டமாகவே இவ்வாறு விருப்பு இலக்கங்களை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு பல்வேறு சுகாதார நடைமுறைகள் அடங்கிய பல்வேறு ஆலோசனைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவுள்ளது.