சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஆலோசனைகளுக்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.எனினும், அலுவலகம் செல்வோர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிப்போர் மாத்திரமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.