எமது வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் இலண்டன் கிளை அமைப்பாளர் தோழர் பாலா அவர்கள், இலண்டன் கிளை சார்பாக ரூ 105,180.00 அனுப்பியிருந்தார்.நிதி வழங்கியவர்களுடனான ஆலோசனைக்கிணங்க, அப் பணம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, அக்கராயன், கரைச்சி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் பொதுமக்களுக்கும், கழகத்தின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த தோழர்களின் குடும்பங்களும் பயனாளிகளில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா நகரசபையின் உறுப்பினருமான தோழர் சு. காண்டீபன், கட்சியின் மாவட்டப் பொருளாளர் தோழர் எஸ். நித்தியானந்தன் ( துரை ) ஆகியோர் மூலம் மேற்படி நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டிருந்தன.