எமது வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் கனடாக் கிளை அமைப்பாளர் தோழர் குணபாலன் அவர்கள், கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளிடம் இருந்து பெற்று ரூ 138,600.00 நிதியை covid-19 நிவாரண நிதிக்காக அனுப்பியிருந்தார்.கனடாவில் நிதி வழங்கியவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கிணங்கவும், ஏற்கனவே தாயகத்தின் பல பகுதிகளிலும் கட்சியின் மாவட்ட நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிவாரண நடவடிக்கைகளை கருத்திற் கொண்டும், தோழர் குணபாலன் அவர்களால் அனுப்பப்பட்ட பணமானது, யாழ்ப்பாண மாவட்டத்தின் பொதுமக்களுக்கும், கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. பயனாளிகளில் மறைந்த கழக தோழர்களின் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம், நிவாரண நடவடிக்கையின் முதற்கட்டமாக, வலிகாமம் தெற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களில் தேவைக்குட்பட்ட 40 ஆசிரியைகளுக்கும், மாவட்டத்தின் 25 போராளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வில், முன்பள்ளி ஆசிரியைகள் ஒன்றியத்தின் தலைமை நிர்வாகி திருமதி. வடிவாம்பிகை மற்றும் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைத் தலைவர் திரு. க. தர்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

போராளிகள் குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் யாவும் கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டிருந்தன.