மட்டக்களப்பு – திஹிலிவெட்டை பிரதேசத்தில், இலுப்படி மும்மாரி குளத்துவெட்டை வாய்க்கால் அருகில் காணப்பட்ட 03 கைக்குண்டுகள், நேற்று (10) மீட்கப்பட்டுள்ளனவென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தக் கைக்குண்டுகளைக் கண்ட விவசாயியொருவர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குண்டுகள் செயலிழக்கப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை, விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.