இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 891 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 382 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.