கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (14) பதிவான 10 பேரில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அத்துடன், ஏனைய இருவர் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களென அவர் தெரிவித்துள்ளார். கடற்படையைச் சேர்ந்த 479 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 137 கடற்படை வீரர்கள் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றாளர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.