கொரோனா அச்சுறுத்தலால் ஜப்பானில் சிக்கியிருந்த 235 இலங்கையர்கள் இன்று (16) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 455 இலக்க விமானத்தில் ஜப்பானின் நரிடா விமான நிலையத்திலிருந்து இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3.38 க்கு நாட்டை வந்த இவர்கள் கிருமி தொற்று நீக்கத்திற்கும், கொவிட் 19 பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்