நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8.00 மணிமுதல் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுமென, அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா தவிர்ந்த  ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பபடுவதுடன்,  23 ஆம் திகதி வரை தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.