எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.ரயில்களில் பயணம் செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிறுவனங்களினால் கோரப்பட்டுள்ள ஆசனங்களுக்கு மேலதிகமாக தொழிலுக்காக செல்லும் இதர பயணிகளின் நன்மை கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.