ஜப்பானில் இருந்து (234) பேர் மற்றும் மியன்மாரில் இருந்து ( 74 ) பேர் உட்பட மொத்தமாக 308 பேர் நேற்று இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் மீயான்குளம் (17), மின்னேரியா (28), அம்பாறை (15), மற்றும் கடற்படை குடும்ப தனிமைப்படுத்தல் மையங்கள் (42) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 102 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் நேற்று தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். நேற்று முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 9374 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தற்பொழுது நாடுபூராகவுமுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 32 தனிமைப்படுத்தல் மையங்களில் 2734 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அதனடிப்படையில் இன்று 16 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 488 ஆகும், அவர்களில் குணமடைந்த 177 பேர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொற்றுக்குள்ளான 311 கடற்படை வீரர்கள் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றன்ர் என்பது குறிப்பிடத்தக்கது.