கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (20) இனங்காணப்பட்டவர், குவைட்டிலிருந்து நாடு திரும்பியவரென, சுகாதார  அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றாளர்களான 1028 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் வரை குவைட்டிலிருந்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.