மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரையும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மூன்று பெண்கள் உயிரிந்துள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.