எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.