சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 பேர், இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சீசெல்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, விசேட விமானம் மூலம், இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

சீசெல்ஸ் அரசாங்கத்தின் இராஜதந்திர கோரிக்கைக்கமைய, இவர்களுக்கு இலங்கையில் வைத்திய பரிசோதனையை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஓய்வுப்பெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீசெல்ஸ் பிரஜைகள், தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.