இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1094 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த ஐவரும் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 674 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 483 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.