ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கான அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நீக்கி, முகக்கவசங்கள் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளி பேணுதல் ஆகியவை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை மாத்திரம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்து ஊழியர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொரு நிறுவன சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானிப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.