23/05/2020 அன்று மாலை வவுனியா கூமாங்குளம் மக்களுக்கான இடர்உதவி நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பத்தினருக்கு இந்நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் உறுப்பினரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினருமான கார்த்திகேசன் நந்தகுமார் அவர்களின் தலைமையில் மக்களுக்கான இடர்உதவி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிவாரணப் பொருட்களுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) புலம்பெயர்ந்த இளைஞர் அணி தோழர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.