24/05/2020 அன்று காலை வவுனியா மதுர நகர் மக்களுக்கான தொடரும் இடர்உதவி நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பத்தினருக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு. க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், மதுர நகர் மக்களுக்கான இடர்உதவி நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிவாரணப் பொருட்களுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) புலம்பெயர்ந்த இளைஞர் அணித் தோழர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.