மோகன்/சங்கிலி/
கணபதிப்பிள்னளை கதிர்காமராஜா (சங்கிலி)
உயிர்ப்பு: 18.08.1962 விதைப்பு: 20.05.1989சங்கிலி என்று தோழர்களினால் தோழமையுடன் அழைக்கப்பட்ட கந்தசாமி கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராவார். ஈழ விடுதலை போராட்டத்தில் முதன் முதலாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே காவல் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்டு ஆயுதங்களை கைப்பற்றி இருந்தது. ஆனைக்கோட்டை பொலிஸ்நிலைய தாக்குதலில் செயலதிபர் உமாமகேஸ்வரன், தோழர் சுந்தரம் ஆகியோரோடு இணைந்து துணிகரமாக ஈடுபட்டதோடு தன்னுயிர் குறித்து கவனம் கொள்ளாது தோழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று சேருவதை உறுதிப்படுத்தும் வரையில் போராடியவர். தோழர் கந்தசாமி குறித்து சிலரின் மத்தியில் ஒரு புரிதல் இருந்தது. இவர் ஒரு அப்பட்டமான இராணுவ செயற்பாட்டாளர், தண்டணை வழகுவதில் தயக்கம் காட்டாதவர், ஒரு வன்முறையாளர் என்றே பரந்தளவில் அறியப்பட்டு இருந்தார். ஆனால் அவர் மனித உயிர்கள் மீது எவ்வளவு மதிப்பு கொண்டிருந்தார் என்பது அவருடன் போராட்ட பாதையில் பயணித்தவர்கள் அறிந்திருந்தார்கள். எமது மக்களின் விடுதலைகான போராட்டம், தலமை, கட்சி என்பனவே அவருக்கு எல்லாமாக இருந்தது. இதற்கான அர்ப்பணிப்பில் தனது உயிரை ஒரு பொருட்டாக அவர் மதித்தது இல்லை. எந்த தீயபழக்கங்களும் அவரை எட்டியதில்லை. ஆச்சரியமாக பார்க்கும் உருவமாக இருந்தும் ஆசைகளுக்கு அவர் அடிபணியாதவராக இருந்தார்.

இறுதியாக பின்தளத்தில் இடம் பெற்ற மகாநாட்டில் இயக்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பாக அவர் தன்னிலைவிளக்கம் கொடுத்திருந்தார். எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பினை நான் செயற்படுத்துகையில் தவறுகள் ஏட்பட்டு இருப்பின் அந்த தவறுகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக செய்யப்பட்டவையே தவிர வேறு எந்த சுயநல எண்ணத்தோடு செய்யப்பட்டவை அல்ல என்று அடக்கத்தோடு அலசியிருந்தார். அத்தோடு தன்னை நிஞாயப்படுத்த முயலாது அன்றில் இருந்து எந்த பதவிகளையும், பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் சாதாரண ஒரு தொண்டனாகவே செயற்பட போவதாகவும் கூறியிருந்தார்.

போராட்டம் என்பது போர்களத்தில் ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடும் விஷயம் அல்ல, சமூகம், பண்பாடு, மதம், கலாச்சாரம், இலக்கியம், தொழிலாளர்கள் அடிமை என்ற வாழ்வோடு தொடர்புடைய அனைத்து தளங்களங்களோடும் பயணிப்பவை ஆகும். இதனை தோழர் கந்தசாமியின் இறுதிக்கால செயற்பாடுகளில் காணமுடிந்தது. இலங்கை இந்திய உடன்படிக்கையினை அடுத்து அவர் மலையக மக்களின் மத்தியில் செயலாற்ற ஆரம்பித்து இருந்தார். அந்த காலங்களில் மலைய மக்கள் அவரை மாஸ்ரர் என்று அன்பாக , ஆதரவாக அழைக்கும் வகையில் சமூக செயற்பாட்டாளராக தன்னை மாற்றிக் கொண்டிருந்தார். அவர்களின் மேம்பாட்டிற்காக ஆவலோடு செயற்பட ஆரம்பித்து இருந்தார். சந்திரசேகரனின் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கு அவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. சிரியா நாட்டினை தளமாக கொண்டு ஜோர்ஜ் ஹபாஸ் தலைமையில் இயங்கிய பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (Popular Front for The Liberation of Palestine, Leader George Habash)ஆயுத பயிற்சி பெற்ற துணிகரமாக , துடிப்பான போராளியாக இருந்த போதும் , மக்கள் மத்தியில் செயலாற்றுவதில் மிகவும் ஆவலுடையவராகவும் அடக்கத்தோடு செயற்படுபவராகவும் இருந்தார்.

1989 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி ஈழத்தமிழர் வரலாற்றில் வேதனைபட வேண்டிய நாளாக, தமிழ் இனம் வெட்கி தலைகுனிய வேண்டிய நாளாக அமைந்தது. அரச கடற்படையினரின் உதவியோடு விடுதலை புலிகள் சகொதர இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினரின் முள்ளிக்குளம் முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். விடுதலை புலிகளுக்கு உதவும் முகமாக அரச கடற்டையினர் கடலில் இருந்து கழகத்தினரின் முகாம் மீது எறிகணை தாக்குதலை ஆரம்பிக்க அதேவேளை புலிகள் முகாமினை சுற்றி வழைத்து தாக்கியிருந்தனர். புளொட் இயக்கமானது அந்த காலகட்டங்களில் மும்முனை தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இந்திய அமைதி படையினர் கழக உறுப்பினர்களை கைது செய்து கொண்டிருந்தார்கள் மறுமுனையில் இலங்கை அரச படைகளும் புலிகளும் இணைந்து கொழும்பு , மற்றும் வட கிழக்கு பகுதிகளில் கழக உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் (The act of searching destroying) ஈடுபட்டு இருந்தார்கள். முள்ளிக்குளம் மீதான அரச படைகளின் உதவியுடனான புலிகளின் தாக்குதலை தோழர் கந்தசாமி தலையிலான கழக போராளிகள் எதிர்கொண்டு புலிகளுக்கு கடும் சேதத்தினைனை உண்டு பண்ணியிருந்தார்கள். பல மணிநேரமாக இடம் பெற்ற தாக்குதலில் தோழர் கந்தசாமி உட்பட 20 பேர்வரையிலான கழக தோழர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். மிகுதி தோழர்களை அரச படைகள் கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றிருந்தனர்.

அரச படைகளுக்கு சிம்ம சொற்பனமாக இருந்த தோழர் கந்தசாமியை புலிகள் அவர்களுடன் இணைந்தே கொன்றொழித்தார்கள். வட கிழக்கு மக்களை மட்டும் அல்லாது மலையக மக்களையும் நேசித்த தோழர் கந்தசாமி காலம் கடந்து அந்த மக்களின் மனங்களில் வாழ்வார்.

வீரவணக்கம் தோழா