மே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பான புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் வெளியிட்டது.

அத்துடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரையில் இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜுன் 06, சனி, முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று – இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.