கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாக 152 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 92 பேர் குவைட்டிலிருந்து  வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், மேலும் 5 பேர் சென்னையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.