இலங்கையில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.