பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிரூபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.