கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தொம்பே பகுதியில் சட்டவிரோமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட மதுபான விற்பனை நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே தொம்பே பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

வாடகைக்கு பெற்ற வீடு ஒன்றிலேயே இவ்வாறு சட்டவிரோமான முறையில் இந்த மதுபான விற்பனை நிலையம் நடத்திச் செல்லப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெறாது தங்காலிகமாக தங்கியுள்ளவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பும் கருதியும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.