இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த இருவரில் ஒருவர் கடற்படையை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் கடற்படையினருடன் நெருங்கிப்பழங்கிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1647 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 813 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.