மலர்வு-1965.10.01 உதிர்வு-05.06.2020

மன்னார் அடம்பன் கன்னாட்டியை பிறப்பிடமாகவும் பெரியகுஞ்சுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் அங்கத்தவர் திரு. பிரான்சிஸ் அருள்தாஸ் (தோழர் அன்ரன்) அவர்கள் இன்று 05.06.2020 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு- அன்னாரின் பூதவுடல் அவரது கன்னாட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்று பூதவுடல் கன்னாட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தொடர்புகட்கு- 774403664 (கொன்சால்)