கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 33 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.