கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சல் புள்ளிகளைக்கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில் பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்படடுடள்ளது.

கன்னொருவ விவசாய தகவல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் சனத் எம். பண்டார இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆப்பிரிக்கவில் இருந்து இந்தியா வரையில் தற்போது வியாபித்துள்ள பாலை வன வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)