கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நேற்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

236 பயணிகளை ஏற்றிய யூ.எல்.1206 என்ற இலக்கமுடைய விமானம் நேற்று மதியம் மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதில் நாடு திரும்ப முடியாமல் காத்திருந்த சிவில் கடற்படையினரும் வருகைதந்துள்ளனர்.

பயணிகள் மற்று விமான ஊழியர்கள் அனைவரும் விமான நிலையத்திற்குள்ளேயே பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.