நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து நேற்று (08) 49 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரை 990 பேர் குணமடைந்துள்ளதுடன், 856 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.