எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளில் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களினது விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களும் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.