யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி டோட்மூன்ட் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் திரு. விஜயராஜா கெளரீஸ்வரன் (தோழர் கௌரி) அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று ஜேர்மனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)