இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை 1889 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1287 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  11 பேர் உயிரிழந்துள்ளனர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.