மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால். நாட்டிலுள்ள சகல மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை நாளை (15) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.