இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் இதுவரை 1896 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 1342 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் தற்போது 543 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.