சாவகச்சேரி, மருதடி, டச்சு வீதியைச் சேர்ந்தவரும் ஐக்கிய இராச்சியத்தின் Luton பிராந்தியத்தில் வசித்தவருமான அமரர் ஆறுமுகம் விஜயபாலனின் 45 ஆம் நாள் நினைவாக, தென்மராட்சியின் கிராம்பூவில் கிராமத்தின் பாலமுருகன் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு தேவையான சீருடைகளும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் நாட்டில் வதியும் புளொட் அமைப்பின் உறுப்பினர் தோழர் S. செல்வபாலன் அவர்களின் புதல்வர்களான S. ஈழதர்சன், S. யாழீசன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பின் மூலமே சீருடைகளும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த 06.06.2020 அன்று இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஓய்வு நிலை அதிபர் திரு. N. சிவகுரு, ஆசிரியர் திரு. கிருபாகரன், சமூக செயற்பாட்டாளர்கள் திரு. ஆ. சிவகுமாரன், ஆர். அருள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.