நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் நேற்று (17) பதிவாகியுள்ளனர். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1926 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களிடையே 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன்,

இவர்களில் 5 பேர் சென்னையிலிருந்து நேற்று (17) நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய இருவரும் கடற்படையச் சேர்ந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1397 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 516 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.