Header image alt text

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்  பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 25 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 98 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் மெல்பர்ன் நகரில் இருந்து இன்று அதிகாலை குறித்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலாச்சார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1948 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more