அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 98 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் மெல்பர்ன் நகரில் இருந்து இன்று அதிகாலை குறித்த நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுள் அதிகமானவர்கள் அவுஸ்திரேலியாவில் உயர் கல்விக்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை இந்திய கடற்படை வீரர்கள் 58 பேர் சென்னையில் இருந்து நேற்று (18) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் சேவையாற்றுவதற்காக குறித்த குழுவினர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.